சிவநாம மகுடம்


வாழ்க்கையில் உயர்வதற்கும், உய்வதற்கும் எந்நேரமும் சொல்வோமாக

நம பார்வதி பதயே! ஹர ஹர மஹாதேவ ! !

தென்னாடு உடைய சிவனே போற்றி !
எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி !!

தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி !
இன்றெனக்கு ஆரமுதம் ஆனாய் போற்றி !!

ஆடக மதுரை அரசே போற்றி !
கூடல் இலங்கு குருமணி போற்றி !!

ஆரூர் அமர்ந்த அரசே போற்றி !
சீரார் திருவை யாறா போற்றி !!

அண்ணா மலையெம் அண்ணா போற்றி !
கண்ணார் அமுதக் கடலே போற்றி !!

திருக்கழுக் குன்றில் செல்வா போற்றி !
பொருப்பமர் பூவனத்து அரனே போற்றி !!

ஏகம்பத்து உறை எந்தாய் போற்றி !
பாகம் பெண்ணுரு ஆனாய் போற்றி !!

இடைமரு(து) உறையும் எந்தாய் போற்றி !
சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி !!

ஈங்கோய் மலையெம் எந்தாய் போற்றி !
பாங்கார் பழனத்து அழகா போற்றி !!

குற்றாலத்து எம் கூத்தா போற்றி !
கோகழி மேவிய கோவே போற்றி !!

ஈசா போற்றி! இறைவா போற்றி !
தேசப் பளிங்கின் திரளே போற்றி !!

அருவமும் உருவமும் ஆனாய் போற்றி !
மருவிய கருணை மலையே போற்றி!!

ஆரா அமுதே அருளே போற்றி !
பேராயிரம் உடைப் பெம்மான் போற்றி !!

கடம்பூர் மேவிய விடங்கா போற்றி !
அடைந்தவர்க்கு அருளும் அப்பா போற்றி !!

பராய்த்துறை மேவிய பரனே போற்றி !
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி !!

மூவா நான்மறை முதல்வா போற்றி !
சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி !!

குவளைக் கண்ணி கூறன் காண்க !
அவளும் தானும் உடனே காண்க !!

காவாய் கனகத் திரளே போற்றி !
கயிலை மலையானே போற்றி !!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s